Aran Sei

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

“நான் இறக்கவும் தயாராக இருக்கிறேன், ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை நிறுத்த மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்திரசேகர் ராவ் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். அதன்படி மே 21 அன்று டெல்லிக்கு சென்ற சந்திரசேகர் ராவ் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசிய அதன்பிறகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு சந்திரசேகர் ராவ் பஞ்சாபிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மதவெறியை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தும் பாஜக – சந்திரசேகர் ராவ் விமர்சனம்

தெலுங்கானா ஒரு மாநிலமாக மாறுவதற்கு முன்பு இங்குள்ள விவசாயிகளுக்கு அதிகளவில் பிரச்சினைகள் இருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசோ, இலவச மின்சாரத்தை நிறுத்திவிட்டு மின்கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று எங்களைக் கட்டாயப்படுத்துகிறது. நான் இறக்கவும் தயாராக இருக்கிறேன், ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை நிறுத்த மாட்டேன் என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

Source : The Print

ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்