Aran Sei

பாஜகவில் இணைய விலை பேசப்பட்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக புகார் – காவல்துறையினர் விசாரணை

தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு, கட்சியிலிருந்து விலகச் சமீபத்தில் மர்ம நபர்கள் விலை பேசியதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆளுங்கட்சியிலிருந்து விலகி அடுத்த தேர்தலில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி சிலர் அணுகியதாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கூறினர்.

இதில் பைலட் ரோகித் ரெட்டி என்ற சட்டமன்ற உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை மாநில அரசு அமைத்து உள்ளது.

டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

இந்த நிலையில் மேற்படி புகார் கூறிய பைலட் ரோகித் ரெட்டி, ஹர்ஷவர்தன் ரெட்டி, ரெகா கந்தராவ், கவ்வல பாலராஜு ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது மிரட்டல் போன் அழைப்புகள் வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. இந்த மிரட்டல் விவகாரம் மாநிலத்தில் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

Source : economictimes

Annamalai BJP Under Performer | Amit Shah | Narendra Modi TN Visit | EPS OPS Sidelined | TN BJP

பாஜகவில் இணைய விலை பேசப்பட்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக புகார் – காவல்துறையினர் விசாரணை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்