Aran Sei

பாஜக ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து, கேஸ், பெட்ரோல், டீசல் விலை மட்டுமே அதிகரித்துள்ளது: தெலுங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முதல் பொருளாதாரம் மற்றும் வேலையின்மை வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அரசிடம் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிஜாமாபாத் சட்ட மேலவை உறுப்பினரும், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்னவானது என்று கேள்வி கேட்ட கவிதா, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் ஒரே ஒரு ஜிடிபி அதாவது கேஸ் சிலிண்டர், டீசல், பெட்ரோல் விலை மட்டுமே அதிகரித்து வருகினறன். இத்தகைய அதிக விலையின் மூலம் பெறப்படும் வருமானத்தை ஒன்றிய அரசு எங்கு முதலீடு செய்துள்ளது என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.

பாஜக ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், வகுப்புவாத கலவரங்கள் அதிகரிப்பு – தெலங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

தெலுங்கானா அரசுக்கு வழங்க வேண்டிய 7000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு எப்போது வழங்கும். தெலுங்கானாவின் நெல் விவசாயிகளும் மஞ்சள் விவசாயிகளும் தங்கள் கடின உழைப்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தற்காக பாஜக அரசால் பழிவாங்கப்படுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியாவில் கோடிக்கணக்கான இந்தியர்கள் குறைந்தபட்ச சம்பளத்துடன் கூடிய ஒரு வேலையை கண்டடைய போராடுகிறார்கள். மேலும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு பின்னால் உண்மையை அறிய விரும்புகிறேன் என்று நிஜாமாபாத் சட்ட மேலவை உறுப்பினரும், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : NDTV

Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan

பாஜக ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து, கேஸ், பெட்ரோல், டீசல் விலை மட்டுமே அதிகரித்துள்ளது: தெலுங்கானா முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்