தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பாஜகவின் ‘மக்கள் விரோத’ கொள்கைகளுக்கு எதிரான தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்திக்க இன்று (பிப்பிரவரி 20) மும்பைக்குப் புறப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரது மும்பை இல்லத்தில் சந்தித்த சந்திரசேகர் ராவ், அவருடன் மதிய உணவு அருந்தினார் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
உத்தவ் தாக்கரே உடனான சந்திப்புக்குப் பிறகு, சரத் பவாரின் இல்லத்திற்குச் சென்று தேசிய அரசியல் பிரச்சினைகள் குறித்து சந்திரசேகர் ராவ் விவாதிக்க உள்ளதாகவும், அதன் பிறகு மாலையில் அவர் ஹைதராபாத் திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
‘பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை மம்தா பானர்ஜி மார்ச் மாதம் சந்திக்கவுள்ளார்’- திரிணாமூல் காங்கிரஸ்
கடந்த வாரம் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மும்பைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதில் பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்துவும் குரல் கொடுத்து வரும் சந்திரசேகர் ராவின் போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவு இருப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக அரசியல் களத்தில் மூன்றாவது அணி அமைக்கும் வேலைகளில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.