Aran Sei

தெலங்கானா: நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ கைது

தெலங்கானா  மாநிலத்தில் முஹம்மது நபிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்  டி. ராஜா சிங் கைது செய்யப்பட்டார் .

டி.ராஜா சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த திங்கள்கிழமை இரவு ஹைதராபாத்தில் பல இடங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி – இஸ்ரோ தலைவர் கருத்து

இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கொண்ட ஒரு காணொளி சமூக ஊட்டகங்களில் வெளியானதால் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

வலதுசாரிகளின் பல்வேறு எதிர்ப்புக்கு இடையிலும் ஹைதராபாத்தில் நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபரூக்கி ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி. ராஜா சிங், இந்துக்களின் மத உணர்வுகளை முனாவர் ஃபரூக்கி புண்படுத்தியுள்ளார் என்றும் முனாவர் ஃபரூக்கி மற்றும் அவரது தாயாருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Source: indiatoday

சென்னைய சினிமால இதுவர சரியா காட்டல | Chennai Day 2022 | Karan Karki | Chennai day celebration

தெலங்கானா: நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்