தெலுங்கானாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இளைஞரின் மரணத்திற்கு ஒன்றிய அரசின் ‘தவறான கொள்கைகள்’ தான் காரணம் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம் ஆற்றியுள்ளார்.
தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ரயில்களுக்குத் தீ வைத்த கும்பல்மீது காவல்துறையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 வயதான ராகேஷ் என்பவர் கொல்லப்பட்டார். 12 க்கும் அதிகமானோர் அதில் காயமடைந்தனர்.
அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்
ரயில்வே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வாரங்கல் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மரணம்குறித்து தெலுங்கானா முதலமைச்சர் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்ததாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்றும் முதலமைச்சர் அலுவலகம் அறிவித்தது.
இளைஞரின் மரணத்திற்கு ஒன்றிய அரசின் “தவறான கொள்கைகள்” தான் காரணம் என்று குற்றம் சாட்டிய முதலமைச்சர், தெலுங்கானாவின் மக்களை மாநில அரசு பாதுகாக்கும் என்று வலியுறுத்தினார்.
Source : NDTV
ராணுவ ஆட்சிக்கான அடித்தளம் தான் Agnipath | Dr Kantharaj
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.