Aran Sei

தடுப்பூசி போட்டு கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 18 மணி நேரத்தில் மரணம் : தடுப்பூசி காரணமில்லை என விளக்கம்

credits : pti

தெலங்கானாவில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட நபர் அடுத்த 18 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மரணம் தடுப்பூசியால் நிகழவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்க் கிழமையன்று (19-12-21) குண்டாலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 11.30 மணியளவில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசியை போட்டுக் கொண்ட அடுத்த நாள் (20-12-21, புதன்கிழமை) நள்ளிரவு 2.30 மணியளவில் வேளையில் அவருக்கு இதய வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிர்மல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு?

அவருடைய மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்பது முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது என்றும் அவருடைய உடல் ஒரு மருத்துவ குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சுகாதார பணியாளர்கள் – கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுப்பு

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்படும் விளைவுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள மாவட்டக் குழு (ஏ இ எஃப் ஐ) இந்த மரணம் தொடர்பாக விசாரித்து மாநில ஏ இ எஃப் ஐ குழுவிற்கு அறிக்கையை சமர்பிக்க இருக்கிறது. மாநில ஏ இ எஃப் ஐ குழு இந்த விவகாரத்தை சரிபார்த்து அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பிக்க இருக்கிறது என்று பொது சுகாதார இயக்குநர் ஜி.சீனிவாஸ் ராவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகள் – காரணம் என்ன?

தடுப்பூசி போட ஆரம்பித்து கடந்த ஐந்து நாட்களில் 82 மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மிக தீவிரமான பின்விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

“கொரோனாவை விட பாரதிய ஜனதா கட்சி கொடியது” – சர்ச்சையை ஏற்படுத்திய திரிணாமுல் எம்பி

தெலங்கானாவில் இது வரை 69,625 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொது சுகாதார இயக்குநரின் கூற்றுப்படி, தடுப்பூசி போட்டுக் கொண்ட 77 பேர் பின்விளைவுகள் இருப்பதாக புகாரளித்துள்ளனர், அவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் மற்றவர்கள் நிலையாக இருப்பதாகவும் ஏ இ எஃப் ஐ குழு தெரிவித்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி போட்டு கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 18 மணி நேரத்தில் மரணம் : தடுப்பூசி காரணமில்லை என விளக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்