Aran Sei

புதுவையில் கரையைக் கடக்கும் நிவர் – டெல்டா மாவட்டங்களில் கனமழை அபாயம்

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து,  (நிவர்)புயலாக மாறியுள்ளதால் வரும் நவம்பர்  25 ஆம் தேதி  காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 24, காலை நிலவரப்படி சென்னைக்குத் தென் கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் தொடர்ந்து அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

‘நிவார்’ புயல் – இது பருவநிலை மாற்றத்தின் பேராபத்து – அருண்குமார் ஐயப்பன்

கடலோர மாவட்டங்களில் காற்று, மணிக்கு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நாளை மாலை புயல் கரையைக் கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உருவானது ”நிவர் புயல்” – வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நவம்பர் 24 ஆம் நாள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என்றும்  நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி கன மழையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான  மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

`சென்னைப் பெரு வெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா?’ – உயர்நீதிமன்றம்

நவம்பர் 25 ஆம் நாள், திருவண்ணாமலை, புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிவார் புயல் – 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் – வானிலை மையம்

நவம்பர் 26 ஆம் நாள், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

புயல், கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் சென்று  மீன் பிடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம், அறிக்கையில் கூறியுள்ளது.

புதுவையில் கரையைக் கடக்கும் நிவர் – டெல்டா மாவட்டங்களில் கனமழை அபாயம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்