Aran Sei

‘ஈழத்தமிழருக்கும் சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடியுரிமைச் சட்டம் நிறைவேறியதற்குக் காரணம், அதிமுகவும் அன்புமணியும் அளித்த 12 வாக்கு தான் என்றும் இப்படி ஆதரித்த முதல்வர் பழனிசாமி, சிறுபான்மையினரை  பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (ஜனவரி 6) திமுக சிறுபான்மையினர்  அணி சார்பில் சென்னை ஒய்எம்சிஏ திடலில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய ஸ்டாலின், “மத்திய அரசின் குடியுரிமைச் சட்டமானது இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத் தமிழர்களையும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம்.” என்று தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜக்கி வாசுதேவை பாஜக எப்படி பயன்படுத்தியது?

மக்களவையில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் அந்தச் சட்டம் நிறைவேறியது என்றும் “மாநிலங்களவையில் நிறைவேறியதற்குக் காரணம், அதிமுக அளித்த 11 வாக்குகளும் அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கும்தான்.  இந்த 12 வாக்குகளும் சேர்ந்தே அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது. அந்தக் குடியுரிமைச் சட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்க தான் செய்தார்.” என்று அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.

“அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போலப் பேசினார் முதல்வர். ஆனால் அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல், எடப்பாடி  பழனிசாமிக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. இது சிறுபான்மையினருக்கும், தமிழருக்கும் சேர்த்து செய்யப்பட்ட இரட்டைத் துரோகம்.” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் – பாகிஸ்தான் திரும்பும் இந்து மற்றும் சீக்கிய அகதிகள்

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இரண்டு திருத்தங்களைச் செய்ய மாநிலங்களவையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொடுத்தார் என்றும் பிற மதத்தவரைப் போல இஸ்லாமியர்களையும் இணைக்க வேண்டும், நாடுகள் வரிசையில் இலங்கை நாட்டை இணைக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு திருத்தங்கள் என்றும் அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.

மேலும், “சட்டத் திருத்தங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது. தோற்கடிக்கப்பட்டது என்றால் தோற்கடித்த வாக்குகள் யாருடையவை? அதிமுகவின் 11 வாக்குகள், பாமகவின் ஒரு வாக்கு. அதாவது இஸ்லாமியர் பெயரையும் ஈழத்தமிழர் பெயரையும் சேர்க்க வேண்டும் என்பதற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிமுகவும் பாமகவும்.” என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒளிப்படங்கள் சொல்லும் வரலாறு : டெல்லியை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு

“இதைத்தான் தமிழினத் துரோகம் என்று சொல்கிறேன். இப்படிப்பட்ட துரோக அரசுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசு சிறுபான்மையினர் மட்டுமே இந்த அரசுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அனைத்து மக்களுமே புறக்கணிக்கப்படுகிறார்கள்.” என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

‘ஈழத்தமிழருக்கும் சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்