Aran Sei

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்குக, ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க” – சீமான்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான். ஆதலால் ஆர்எஸ்எஸ்ஸை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

‘மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்’ – பிஎப்ஐ தடைக்கு கேரள சிபிஎம் கருத்து

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவரிடம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு 5 ஆண்டு தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு சமூக இயக்கம், ஒரு ஜனநாயக இயக்கம். எனவே, அந்த இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான். அது அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட்டதால், இந்த ஆட்டத்தை ஆடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், அக்டோபர் 2-ம் தேதி விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் சார்பில், நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி பேரணியை வரவேற்பதாகக் கூறிய சீமான், தானும் இந்த பேரணியில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

பரதேசி பயலுகளா…ஆர்.எஸ்.எஸ தான் தடை செய்யயப்படனும் | Seeman Speech supports thirumavalavan rally

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்குக, ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க” – சீமான்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்