பாஜக ஆட்சியில், தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது, மத்திய அரசை விமர்சித்தால் தேச விரோதி என்கின்றனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 17) மாலை, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏஎப்டி மில் திடலில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
என் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன் – ராகுல் காந்தி
அப்போது பேசிய ராகுல் காந்தி, “தான் நாட்டின் சக்கரவர்த்தி என்று மோடி நினைக்கிறார். பிரதமராகச் செயல்படவில்லை. அவர் புதுச்சேரி மக்களின் எண்ணத்தை மதிக்க வேண்டும். நிதி ஆதாரத்தைத் தர வேண்டும். எதுவும் மோடி செய்யவில்லை. கடந்த முறை நீங்கள் வாக்களித்ததை அவமதித்த பிரதமரைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.” என்று கோரியுள்ளார்.
“புதுச்சேரிக்கு என்ன அநீதியை செய்கிறார்களோ அதையே இந்தியாவுக்கும் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது என்கின்றனர். பஞ்சாபில் தீவிரவாதிகள் என்கின்றனர். அரசை விமர்சித்தால் தேச விரோதி என்கின்றனர்.” என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘விவசாயிகள், தலித்துகளின் போராட்டங்களை ஆதரித்தால், தேசதுரோக வழக்கா?’ – வைகோ கண்டனம்
மேலும், மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளைச் சித்திரவதை செய்கிறார்கள் என்றும் மூன்று சட்டங்களின் நோக்கம் கோடிக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலத்தைப் பறித்து சில பணக்காரர்களிடம் கொடுப்பதேயாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“இந்தச் சட்டம் வரும்போது விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் நிறுவனத்தினர் தெருவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. ஏழை மக்கள் உணவுக்கு, உணவுப்பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது. இதுதான் எதிர்காலத்தில் நடக்கும்.” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.