ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. அந்தப் பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை – முடிவுக்கு வந்தது கண்ணாமூச்சி – பின் வாங்கியது சிபிஐ
மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று அழைக்கப்படும் பல்நோக்கு விசாரணைக் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிபிஐ விளக்கமளித்துள்ளது.
நேற்று (நவம்பர் 23), திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது” ’அம்மா அரசு’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, ஆளுநரைச் சந்திக்கும் பொழுது அவரிடம் பேசி என்னுடைய மகனுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் – அற்புதம் அம்மாள்
மேலும், “என்னுடைய மகன் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால் ‘பரோல்’ கேட்டு அவரை நான் இப்பொழுது பராமரித்து வருகிறேன். என்னுடைய கணவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால், என் மகனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் மேலும் வலியுறுத்தி வருகின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று (நவம்பர் 23) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “சட்ட விசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே, பேரறிவாளனின் முப்பதாண்டுச் சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது. சட்ட, நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன.” என்று கூறியுள்ளார்.
‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்
ஆளுநர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
”பரவாயில்லை, தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டவிசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது.சட்ட,நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன.கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது?
பரவாயில்லை,தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள்.— Kamal Haasan (@ikamalhaasan) November 23, 2020
நேற்று (நவம்பர் 23) மாலை ராஜ்பவனில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்க இருந்த நிலையில், அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.