Aran Sei

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரம்: பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது – மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

ரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது என மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.

மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மராட்டியம், தமிழகம், கேரளா,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை; ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை. அதானி பற்றிய அறிக்கையை இந்தியாவுக்கு எதிரானதாக எப்படி கருத முடியும். முன்னதாக பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைக்கிறது.

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல். ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது என்று கனிமொழி பேசியுள்ளார்.

Kalaignar is an Inseparable Part of Tamilnadu – Dr Kantharaj | Karunanidhi Pen Statue | Seeman | BJP

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரம்: பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது – மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்