Aran Sei

பணமோசடி புகார் : பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் ஈடுபட்டதாக வைத்த புகாரை அடுத்து, நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-லிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்துள்ளார்.

இந்த நிலையில், சினேகன் அளித்த புகாரின் பேரில் சின்னத்திரை நடிகையும், பாஜக. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source : dailythanthi

ரூபாய் நோட்டில் பிள்ளையார் படம் | நிம்மியை முந்திய காவி கெஜ்ரிவால் | Aransei Roast | BJP | AAP

பணமோசடி புகார் : பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்