Aran Sei

‘பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றதுண்டா?’ – எல்.முருகனுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சுதந்திர போராட்டத்தில் பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள், ஒரு துரும்பையாவது எடுத்து போட்டதுண்டா என்றும் ஜனசங்கம், பாஜக தலைவர்கள் எவராவது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒரே ஒரு நாளாவது சிறைக்கு சென்றதுண்டா என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 15) கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இந்துத்துவம்தான் நம் நாட்டின் சுயராஜ்ஜியம் – மோகன் பாகவத்

அப்போது, “தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பொறுப்பேற்றது முதல் எதிர்காலமே இல்லாத பாஜக-வுக்கு சப்பை கட்டு கட்டுவதற்காக வரம்புகளை மீறி பேசி வருகிறார். வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும் இடையே நடக்கிற யுத்தம் என்று கூறியிருக்கிறார். யார் தேசபக்தர்கள்? யார் தேச விரோதிகள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போராடி, சிறை சென்று 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெறப்பட்டது என்று நினைவூட்டிய கே.எஸ்.அழகிரி, “60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சுதந்திரப் போராட்டத்தில், இன்றைய பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், ஒரு துரும்பையாவது எடுத்து போட்டதுண்டா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

மேலும், “ஜனசங்கம், பாஜக தலைவர்கள் எவராவது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒரே ஒரு நாள் சிறைக்கு சென்றதுண்டா? சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத இன்றைய பாஜக, இந்தியாவில் ஆட்சி செய்வது இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று துன்பங்களை அனுபவித்தவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானமாகும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் விடுதலைக்கு பங்களிக்காத தேச துரோகிகளின் கூடாரமாக இருக்கிற பாஜக, தேசபக்தர்களின் சங்கமமாக இருக்கிற இந்திய தேசிய காங்கிரசை விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதியிருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றதுண்டா?’ – எல்.முருகனுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்