Aran Sei

‘கோவிட் போர்வீரர்களின் வேலையை பறிப்பதுதான், பொங்கல் பரிசா?’ – கனிமொழி கண்டனம்

கொரோனா பெருந்தொற்றில் நமக்காக உழைத்த துப்புரவு தொழிலாளர்களின் வேலையை பறித்ததுதான், பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்கு காட்டும் நன்றியா என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் நமக்காக போராடிய முன் களப்பணியாளர்களான , சென்னை மாநகராட்சியை சேர்ந்த ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 700 பேரின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக, ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்ததாரருக்கு எதிராக துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்

இதுகுறித்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி, ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், “கோவிட் போர் வீரர்கள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டாலும், இந்த இபிஎஸ் அரசு சென்னையில் 700 துப்புரவு தொழிலாளர்களின் வேலையை பறித்துள்ளது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாம் பெருந்தொற்றின்போது அவர்களை சார்ந்து இருந்தபோதும், அவர்களுக்கு உரிய நேரம் தரப்படாமல் அதுவும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள இந்த காலக்கட்டத்தில் இது மிகவும் மோசமான செயல் என்று கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்கு காட்டும் நன்றி இதுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்புரவு பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பேராசிரியர் லக்ஷ்மணன்

கடந்த செப்டம்பர் மாதம், 3000-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

291 துப்புரவுத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடையூறு விளைவித்ததாகக்கூறி அவர்களைப் பணியிலிருந்து சென்னை மாநகராட்சி நீக்கியது. வேலை பறிபோன 291 துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டது.

பணியை உறுதி செய்யுங்கள்: துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணி (NULM) அமைப்பின் கீழ் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் 60% மட்டுமே வழங்கப்படுகிறது.

2017 அக்டோபர் 11 தேதியிட்ட இந்த அரசு ஆணை, துப்புரவு தொழிலாளர்கள் நாளொன்றிற்கு ரூ. 624.50 -ஐ ஊதியமாக நிர்ணயித்தது. ஆனால், அவர்கள் ஒரு நாளுக்கு ரூ.379 மட்டுமே பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கோவிட் போர்வீரர்களின் வேலையை பறிப்பதுதான்,  பொங்கல் பரிசா?’ – கனிமொழி கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்