Aran Sei

தங்காத விடுதிக்கு கட்டணமா? – சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கொரோனா பேரிடரால் சென்னைப் பல்கலைக்கழக விடுதி செயல்படாத காலத்திற்கும் சேர்த்து விடுதி கட்டணத்தைச் செலுத்தச் சொல்லி மாணவர்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் நிர்பந்திப்பதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2020 மார்ச் மாதம் பாதியிலிருந்து கொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குக் காலவரையின்றி விடுமுறை விடப்பட்டு  இணைய வழியில் பாடம் நடத்தப்பட்டு வந்த சூழலில், சென்னைப் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருந்த நிலையில், விடுதி நிர்வாகத்தால் ஏப்ரல் முதல் நவம்பர் 2020 வரையிலான உணவக தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மாணவர்களையே கட்டச் சொல்லித் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் அதிரடி

இதுகுறித்து அரண்செய் – யிடம் பேசிய மாணவர் பிரதிநிதி ஒருவர், “விடுதி கட்டண பிரச்சனைகளைத் தீர்க்கப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரைப் பலமுறை விடுதி மாணவர்கள் சந்திக்க முயன்றும் இதுவரை எங்களை ஒருமுறைகூட அனுமதிக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

பதிவாளர் தரப்பு  முறையாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைத் துறைத்தலைவர்களை வைத்து மிரட்டுவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இரண்டு மசூதிகளை தாக்க திட்டமிட்டிருந்த இந்தியர் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது

சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாகத் தரமணி, கிண்டி, மெரினா வளாகம் ஆகிய மூன்று இடங்களிலும் உணவுடன் கூடிய விடுதியில் மாணவர்கள் தங்கிப் பயின்று வருவதாகவும்,  இதில் சுமார் 35 மாணவர்களை உள்ளடக்கிய மெரினா வளாகத்தில் ஆய்வு மாணவர்கள் உட்பட 27 மாணவர்கள் தங்கியிருப்பதாகவும், தற்சமயம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நேரடி வகுப்புகளின் காரணமாக விடுதியில் தங்கி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்த அவர், விடுதி தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மாணவர்கள் செலுத்தினால்தான் உணவகம் திறக்கபடுமென்றும் விடுதி நிர்வாகம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

தற்போது மெரினா வளாக விடுதியின் மேனேஜராக நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஆதிக் கண்ணன், அனைத்தும் பதிவாளர் சொல்லித்தான் செய்வதாக மாணவர்களிடம் கூறியதாகப் போராட்ட்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மாணவர் பிரதிநிதி அரண்செய் யிடம் கூறினார்.

டிராக்டரில் சட்டபேரவைக்கு சென்ற ஹரியானா எம்.எல்.ஏ – விவசாய சட்டங்களைக் கண்டித்து ராஜினாமா

விடுதியில் தண்ணீர் வரவில்லை என்று  மாணவர்கள் விடுதி நிர்வாகை ஆதிக் கண்ணனிடம் முறையிட்டபோது ’ஃபீஸ் கட்டினால் சரிசெய்வோம்’ என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

விடுதி உணவகத்தை  உடனடியாகத் திறந்து மாணவர்களுக்கு உணவளிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் செயல்படாத விடுதிக்குப் போடப்பட்டிருக்கும் விடுதி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கில் விடுதி ஊழியர்களுக்கான சம்பளத்தை மாணவர்களிடமிருந்து பறிப்பதை தடுத்து நிறுத்தி நிர்வாகமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைச் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென மெரினா வளாக விடுதி மாணவர்கள் கோரியுள்ளார்கள்.

தங்காத விடுதிக்கு கட்டணமா? – சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்