Aran Sei

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை – இந்தியா கடும் கண்டனம்

Image Credit : thewire.in

3 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது தொடர்பாக, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“மீனவர்களின் படகும் இலங்கை கடற்படை கப்பலும் மோதியதில் 3 இந்திய மீனவர்களும், ஒரு இலங்கையைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்று இந்திய வெளியுறவுத்துறை வியாழக் கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான கண்டனத்தை, இலங்கையில் உள்ள இந்திய தூதர் இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள இலங்கையின் தற்காலிக தூதரிடமும் கடுமையான செய்தி தரப்பட்டது” என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்

தமிழக கடற்கரைக்கும் இலங்கையின் வடக்கு முனைக்கும் இடையேயான குறுகிய பாக் நீரிணைப்பில் மீன்பிடிப்பது தொடர்பான சிக்கல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையை கடந்ததாகக் கூறி, இலங்கை கடற்படை அவர்களது படகுகளை கைப்பற்றி அவர்களை சிறைபிடிப்பதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்ச்சியான நிகழ்வாக உள்ளது.

’மீனவர்களை கொல்லும் ராஜபக்சே சகோதரர்கள்; தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு’ – ஸ்டாலின் கண்டனம்

“மீனவர்கள் தொடர்பான பிரச்சினையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இப்போது உள்ள புரிந்துணர்வுகளை கறாராக கடைப்பிடிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள முழு முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்” என்றும் இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதாக இலங்கையில் போராட்டம் – இந்தியாவிடம் கோரிக்கை

ஒரு இந்திய மீன் பிடி படகு சர்வதேச எல்லையைக் கடந்து வந்த போது, இலங்கை ரோந்து படையினர் அதை கைப்பற்றினர் என்றும், அவற்றில் ஒரு படகு இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் படகில் மோதி மூழ்கி விட்டது என்றும் இலங்கை கடற்படை திங்கள் கிழமை தெரிவித்திருந்தது.

இலங்கை கடற்படையின் படகு மோதி தமிழக மீனவர்கள் பலி – உடலை ஒப்படைக்கக்கோரி மறியல்

இந்த விபத்துக்குப் பிறகு காணாமல் போன மீனவர்கள் மீட்பதற்காக இந்திய கடற்படையும், கடலோர பாதுகாப்புப் படையும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. நேற்று நான்கு உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன என்று தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை – இந்தியா கடும் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்