தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 151 முதல் 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 76 முதல் 83 இடங்கள் கிடைக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 25 தொகுதியைச் சேர்ந்த மக்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தை கொண்டு இந்த முடிவுகளை வந்தடைந்திருப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்குத் திமுக கூட்டணி என 38.2% னரும், அதிமுக கூட்டணி என 28.48% னரும், மக்கள் நீதி மய்யம் கூட்டணி என 6.30% னரும், நாம் தமிழருக்கு என 4.84 % னரும், சசிகலா ஆதரவு கட்சிக்கு என 1.09% னரும், மற்றவர்கள் என 9.53%னரும், தெரியாது 11.56%னரும் ஆதரவு தெரிவித்திருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ‘டைம்ஸ் நவ்’ கருத்துக் கணிப்பு முடிவு
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு 37.51 விழுக்காட்டினரும், அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 28.33 விழுக்காட்டினரும், மநீம தலைவர் கமலஹாசனுக்கு 6.45 விழுக்காட்டினரும், நாம் தமிழர் கட்சியின் சீமானிற்கு 4.93 விழுக்காட்டினரும், சசிகலா ஆதரவு வேட்பாளருக்கு 1.33 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவித்திருப்பது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலின்போது எந்தப் பிரச்னை உங்கள் வாக்களிக்கும் முடிவைத் தீர்மானிக்கும் என்ற கேள்விக்கு விலைவாசி உயர்வு என்று 32.01% பேர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலை இழப்பு – 6.24%, தமிழ் கலாச்சார பாதுகாப்பு – 1.72%, தேசியவாதம் – 0.85%, வேறு கருத்து – 23.48%, மற்ற பிரச்னைகள் – 12.70%, பொருளாதார நிலைமை – 10.07%, வேலைவாய்ப்பின்மை – 9.94%, மதச்சார்பின்மை – 1.92%, ஆட்சி மாற்றம் – 8.26%, சொல்ல இயலாது – 5.49%, தெரியாது – 12.70% பேர் என பதில் அளித்திருந்தனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு
அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்குச் சந்தர்ப்பவாத கூட்டணி என 36.87% பதிலளித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டுக்கு நல்லது – 16.66%, அதிமுக ஆதாயமடையும் – 8.44%, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் – 7.02%, பாஜக ஆதாயமடையும் – 5.91%, வேறு கருத்து – 7.61%, தெரியாது அல்லது இயலாது – 17.49% பேர் என தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்விக்குப் போராட்டத்தை ஆதரிப்பதாக 81.20 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர், வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக 8.24 விழுக்காட்டினரும், வேறு கருத்து என 3.95 விழுக்காட்டினரும், தெரியாது அல்லது சொல்ல முடியாது என 6.61 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.
‘ஆரோக்கியத்தை பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு’ – கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
கொரோனா ஊடரங்கால் பொருளாதார ரீதியாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டதாக 41.39% தெரிவித்துள்ளனர். கடுமையாக – 30.35%, மிதமாக – 8.85%, குறைவாக – 8.46%, பாதிப்பு இல்லை – 9.75%, வேறு கருத்து – 0.31%, தெரியாது அல்லது சொல்ல இயலாது – 0.89% பேர் பதிலளித்துள்ளனர்.
தற்போது பொருளாதார நிலைமை சீராகி விட்டதா என்ற கேள்விக்கு, சீராகி வருகிறது என 45.53% பதிலளித்துள்ளனர். மேலும் ஆம் என 16.22%-னரும், இல்லை என 34.41%-னரும், வேறு கருத்து என 1.50%-னரும், தெரியாது அல்லது சொல்ல இயலாது என 2.33%-னரும் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.