டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் எடப்பாடிக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 12), அவர் கொளத்தூரில் திமுகவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. தட்டிக் கேட்கும் வகையிலான அரசு தமிழகத்தில் இல்லை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி vs மு.க.ஸ்டாலின் – ஒரே மேடையில் விவாதம்? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்
நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற போது, அந்த நீட் தேர்விலிருந்து எந்த முறையில் விலக்குப் பெற வேண்டுமோ, அந்த விலக்கைப் பெறுவோம் என்றும் அதற்காக எங்களது சக்தி முழுவதையும் பயன்படுத்துவோம் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மேலும், “தேர்தல் வருகின்ற காரணத்தால், முதல்வர் பழனிசாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது டேட்டா கார்டு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் அவருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.