Aran Sei

’பாஜகவின் பேச்சுவார்த்தை எரியும் நெருப்பில் எண்ணெயாக இருக்கக் கூடாது’ – முத்தரசன்

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் பாஜக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று (நவம்பர் 29) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் விரோத, வேளாண் பெருவணிகச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.” என்று கூறியுள்ளார்.

தடைகளை மீறித் தொடரும் விவசாயிகள் போராட்டம் – இன்று தில்லி முற்றுகை

விவசாயத்தைப் பெருவணிக நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதன் மீது கவனம் செலுத்தி, விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து, ஜனநாயகப்பூர்வத் தீர்வுகாண பாஜக மத்திய அரசு தவறியது என்றும், “நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்து, அத்துமீறி அவசரச் சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றதாக அறிவித்துவிட்டது.” என்று விமர்சித்துள்ளார்.

”நாடு முழுவதும் உள்ள சுமார் 20 கோடி விவசாயிகளும் வாழ்வுரிமை பறிபோகும் பேராபத்தை உணர்ந்து, விவசாய விரோதச் சட்டங்களையும் மின்சாரச் சட்டத்திருத்த மசோதா 2020யையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ப் போராட்டங்களை அறிவித்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

பாஜக மத்திய அரசு போராட்டத்தில் விவசாயிகளை தில்லிக்குள் அனுமதிக்காமல் தடுக்க சாலைகளில் தடுப்பு அரண் அமைத்தது, கண்ணீர்ப் புகை குண்டுகளையும்,  பீரங்கி வண்டிகளையும் வைத்துக் கடுங்குளிரில் நின்ற விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தும் தடியடி நடத்தியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ”நெடுஞ்சாலை நீள, அகலப் பள்ளங்களைத் தோண்டித் துண்டித்தது. உணவளிக்கும் உழவர்கள் மீது மத்திய பாஜக அரசு யுத்த தாக்குதல் நடத்தியது. இவை அனைத்தையும் தாண்டி, தலைநகர் டெல்லியில் திரண்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.” என்று கூறியுள்ளார்.

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

விவசாயிகளின் மாபெரும் எழுச்சியின் நிர்பந்தத்தால் டிசம்பர் 3-ம் தேதி மத்திய பாஜக அரசு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் டிசம்பர் 3-ம் தேதிக்கு முன்பாகவே பேசத் தயார் என அறிவித்துள்ளார்.

”மத்திய பாஜக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அமைய வேண்டும். விவசாயிகள் உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும். இதற்கு மாறாகப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்து ஏமாற்றும் வஞ்சகம் எண்ணம் இருந்தால் அது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெரிவித்துள்ளார்.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

உழவர்கள் ஒன்றுபட்டு நடத்திவரும் போராட்டத்திற்கு ஜனநாயகச் சக்திகள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதியினரும் பேராதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

’பாஜகவின் பேச்சுவார்த்தை எரியும் நெருப்பில் எண்ணெயாக இருக்கக் கூடாது’ – முத்தரசன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்