Aran Sei

உருவாகிறது புதிய புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும் விரைவில் புயலாக மாற வாய்ப்பிருக்கலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் கரையைக் கடந்தது. வலுவிழந்த நிவர் புயலால் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கரையைத் தொட்டது நிவர் புயல் – மழையும் காற்றும் நீடிக்கின்றன

இந்நிலையில், தெற்கு வங்கக்கடலில் 29 ஆம் தேதி புதிய காற்றழுத்த பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவான 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகுமென்று கூறப்படுகிறது. டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உருவானது ”நிவர் புயல்” – வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி வருகிறதென்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தத் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கஜா புயலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் – அழிவிலிருந்து மீளாத விவசாயிகள்

நிவர் புயல் உருவாகி கரையைக் கடந்திருக்கும் நிலையில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இன்னும் குறையாமல் இருக்கிறது. உருவாகி வரும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பரவலாக மழைபெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 1500 கன அடி நீர் வெளியேற்றம்

நிவர் புயலின் பாதிப்பால் சென்னையின் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெருமழை உருவானால் மிகுந்த சேதத்தை உருவாக்க வாய்ப்பிருக்கலாம். காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நிலை குறித்து தொடர்ச்சியாக அறிவிக்கப்படுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவாகிறது புதிய புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்