Aran Sei

அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் பாஜக வளரும் – சுப்பிரமணியன் சாமி கருத்து

credits : india tv news

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து அரசியல் செய்யக் கூடாது. பாஜக தனியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து தொகுதியிலும் பாஜக தனித்து போட்டியிட்டால் மட்டுமே வளர முடியும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, “வேறு மாநிலங்களில் உள்ளது போல், தமிழக பாஜக கட்சி பணிகள் எதுவும் செய்வதில்லை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்யக்கூடாது. பாஜக தனியாக நிற்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பாஜக வளர்வதாக அர்த்தம்.

‘குருமூர்த்திபோல் எல்லா பார்ப்பனர்களும் கோழைகள் அல்ல’ – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்பதை எப்படி சொல்ல முடியும். பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் முடிவாகவில்லை என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் பாஜக வளரும் – சுப்பிரமணியன் சாமி கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்