ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததற்கு குழந்தை உரிமை ஆர்வலர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தவறு செய்யும் மாணவர்களை திருத்துவதில்தான் சிறார் நீதி அமைப்பு கவனம் செலுத்துகிறது. முக்கியமாக அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அவர்கள் பள்ளிக்குச் சேர்வது கடினம். அத்தகைய மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாகவோ, குற்றவாளிகளாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் என்று குழந்தை உரிமை ஆர்வலர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.
“ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் நன்மதிப்பு சான்றிதழில், எந்த காரணத்திற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டால் அத்தகைய மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேர முடியாமல் போகும் வாய்ப்புள்ளது” என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ சேசுராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் “தவறு செய்யும் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு எந்தச் சூழ்நிலைமைகளால் அவர் தவறு செய்கிறார் என்பதை பள்ளி கல்வித்துறை ஆராய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்மாதிரி அரசுப் பள்ளிகள் திராவிட மாடலுக்கு எதிரானது – பிரின்ஸ் கஜேந்திர பாபு
“கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால் இத்தகைய பிரச்சினைகள் எழுந்துள்ளது. பெரும்பாலான கட்டுக்கடங்காத மாணவர்களை உளவியல் ஆலோசனை மூலம் சீர்திருத்தவும், ஒழுங்குபடுத்தவும் முடியும்” என்று உளவியலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Source : newindianexpress
சர்வாதிகாரிகளுக்கு இது தான் நடக்கும் Sasikanth Senthil Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.