தமிழ்நாடு எஸ்சி.எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டுமாறு முதலமைச்சருக்கு மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்சி.,எஸ்டி மக்களுக்கான தேசிய ஆணையங்கள் போன்று, மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்து வந்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினரின் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பை கொண்டு வந்தது. சட்டத்தில் நிறுவப்பட்ட இந்த ஆணையம், தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் செயல்படும் அமைப்பாக திகழும்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவகுமார் ஆணையத்தின் தலைவராகவும், ‘தலித் முரசு’ இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
RSS pracharak yashwant shinde confession on secret meeting for bjp | chat with haseef | deva
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.