ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் ‘தமிழ்நாடு ஊராட்சிகள்’ சட்டத்திருத்தம் சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவலுக்கு நேரெதிரான நடவடிக்கை என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சியின் கீழ் செயல்படும் ஊராட்சிச் செயலர்களை இடமாற்றம் செய்யும் மற்றும் தண்டிக்கும் அதிகாரம் ஊராட்சியின் செயல் அதிகாரியான ஊராட்சித் தலைவரிடமிருந்து, ஊரக வளர்ச்சித் துறையால் நியமிக்கப்படும் அலுவலருக்கு மாற்றப்படும் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 104 (இடமாற்றம்) மற்றும் 106 (தண்டிக்கும் அதிகாரம்) ஆகிய சட்டப் பிரிவுகளில் தமிழக அரசால் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது – ராகுல் காந்தி
இதன்மூலம் ஊராட்சிச் செயலரை இடமாற்றம் செய்யும்போது கிராம ஊராட்சித் தலைவரையோ, ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சிகளுக்கு அதிகாரமளிப்பதன் முக்கிய நோக்கமே சமூகநீதியும், பொருளாதார முன்னேற்றமும்தான். ஆனால், இவ்விரண்டையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவலுக்கு நேர்மாறாக தமிழக அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஏற்புடையதல்ல. இந்த சட்டத்திருத்தம் கண்டிக்கத்தக்கது. சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊராட்சி செயலர்களை நியமிக்கும் அதிகாரம் ஊராட்சிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த, விதிமீறும், தவறு செய்யும் ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யும் மற்றும் தண்டிக்கும் அதிகாரமும் தற்போதைய திமுக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தால் ஊராட்சி மன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
கியானவாபி மசூதி வழக்கு: அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிபதியால் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றமும், சட்டமன்றமும் தாங்களாகவே உள்துறைச் செயலாளர்களை நியமிக்கும் பட்சத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றங்களும் தாங்களாவே ஊராட்சி செயலரை நியமிக்கவும், அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களிடம் கேள்வி எழுப்பித் தண்டிக்கவும், அவர்களை வரன்முறைப்படுத்தவும் ஏன் கூடாது? அவ்வாறு அதிகாரப் பகிர்வு அளித்தால் மட்டும் தானே அது உண்மையான சுயாட்சியாக இருக்கும்?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் தாண்டி, அரசு அலுவலர்கள் எனும் அதிகார வர்க்கமே தமிழ்நாட்டில் பெரும்பாலும் அதிகாரம் செலுத்திவரும் நிலையில், இச்சட்டத் திருத்தம்மூலம் சட்டரீதியாகவே ஊராட்சித் தலைவருக்கு மேல் அதிகாரமிக்க ஆளாகிறார், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஊராட்சிச் செயலர். எளிய விளிம்புநிலை மக்களைச் சுரண்டும் இது போன்ற அதிகார வர்க்கத்துக்கு மேலும் அதிகாரத்தை வழங்கும் வகையிலேயே திமுக அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.
2019 ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது – உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை
ஆகவே, உள்ளாட்சிகளுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில், கிராம ஊராட்சிகளுக்கு அதன் செயலர்களை தாங்களே நியமிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும். மேலும், தவறிழைக்கும் ஊராட்சி செயலர்மீது கிராமசபை மூலமாகவே நடவடிக்கை மேற்கொள்ளும் வழிவகை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, ஊராட்சிமன்றத்தின் சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவலுக்கு நேரெதிரான, தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தில் மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தத்தைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு பேசுற தகுதியே கிடையாது Vanchi Nathan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.