ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாயுடு என்று எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர் தற்போது தமிழ்நாடு என்று திருத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 74வது குடியரசு தினம் கடந்த 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் எகிப்து அதிபர் அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் நடைபெற்ற முப்படை அணிவகுப்பை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும், ஜம்மு காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் பங்கேற்றன.
இந்நிலையில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒன்றிய அரசின் இணையதளத்தில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் பெயரானது எழுத்துபிழையுடன் காணப்பட்டது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு திருத்தப்பட்டுள்ளது.
ராமர் பாலம் இருந்தது என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை – ஒன்றிய அரசு தகவல்
இதனை சுட்டிகாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது அந்த எழுத்துப்பிழை திருத்தப்பட்டிருப்பதை வரவேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் http://mygov.in இணையதளத்தில் தவறாக TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டு உள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கேரள மாநிலத்தின் பெயரும் ஆங்கிலத்தில் கேரிலா என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. தற்போது கேரள மாநிலத்தின் பெயரும் திருத்தப்பட்டுள்ளது.
Annamalai turns his back on Erode East Bypolls – Savithri Kannan | Erode Election | Evks Elangovan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.