தமிழக ஆளுநரின் செயல் நாகரீகமற்றது என்று வாழப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் 49-வது நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் ப.வேல்முருகன் வரவேற்றார். மூத்த நிர்வாகி வி.சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மு.மோகன்ராஜ், கார்முகிலன், சத்தியமூர்த்தி, வீரன், மு.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தந்தை பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து பேசிய, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “தமிழ்நாட்டில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்ததற்கும், பெண்கள் உயர் பதவிகளுக்கு வந்ததற்கும் தந்தை பெரியார் முழு முதற்காரணமாவார். அடித்தட்டு மக்களை, கோவில் அர்ச்சகராக்கி சமூக நீதியை நிலைநாட்டியது தந்தை பெரியாரின் வழி வந்த திராவிட கட்சிகள். இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் மிகச் சிறப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் நாகரீகமற்றது. தமிழக மக்கள் பெரியாரால் வளர்க்கப்பட்டு போதிய விழிப்புணர்வு பெற்றவர்கள் என்பதை ஆளுநர் உணர்ந்து கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.
Governor Rn Ravi should Resign – Trichy Velusamy Interview | Governor Dmk Fight in Assembly | Rss
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.