Aran Sei

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தமிழக அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

டுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் தமிழ்நாடு அரசு துணைநிற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காகக் கழகமும் கழக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்

மேலும், இதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரிக்குச் சென்று நரிக்குறவர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆணைகளையும் வழங்கினேன்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் கிராமங்களில் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்டறிந்து தேவைகள் மதிப்பீட்டுப் பட்டியல் தயார் செய்திடவும் தலைமைச் செயலாளர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது – உ.பி, பட்டியலின சகோதரிகள் கொலை குறித்து ராகுல்காந்தி கருத்து

அதனடிப்படையில், 5,875 குடியிருப்புப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் மதிப்பிடப்பட்டு, புதிய கான்கிரீட் வீடுகள், குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், வாக்காளர் அடையாளை அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பல்வேறு உதவித் தொகைகள், சாலை வசதி, திறன் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

நரிக்குறவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியிருக்கும் இவ்வேளையில், நரிக்குறவர் இன மக்களின் சமூகநீதிக்காக அனைத்து மட்டங்களிலும் கழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காகவும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் மதுரையில் இன்று என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பாஜகவில் சேருவதை பற்றி கடவுளிடம் கேட்டபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார் – பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்து

சமத்துவப் பெரியார் கலைஞரின் வழியில் நடக்கும் நமது அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் துணைநிற்கும் என்று அவர்களிடத்தில் உறுதியளித்தேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kallakurichi Girl mother appeal in Supreme court | Kallakurichi Case latest update | Devas Update 24

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தமிழக அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்