Aran Sei

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை மீண்டும் தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ன்றிய அரசிற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இடையேயான பொது நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க கவுன்சில் ஒரு தளமாக இருப்பதால், கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை மீண்டும் ஆரம்பித்து நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மே 28, 1990 அன்று தேதியிட்ட குடியரசுத் தலைவர் ஆணை மற்றும் கட்டளையின் 5 வது பிரிவின்படி, மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்கள் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் நிறுவப்பட்டது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில், ஒரே ஒரு கூட்டம் மட்டுமே (ஜூலை 16, 2016 அன்று) நடந்தது என்று ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கவுன்சில் மே 22 அன்று மறுசீரமைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களின் தலைவரான பிரதமரிடம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை பாதிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு மசோதாவும், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கவுன்சிலின் முன் வைக்கப்பட வேண்டும் என்றும், கவுன்சிலின் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

கவுன்சிலில் விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் தாக்கல் செய்யப்பட வேண்டும். “மேலும் இதுபோன்ற ஒரு தளம் இல்லாததால், பொது நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் பயனுள்ள தகவல்தொடர்பு இல்லை” என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதிக்கும் பல மசோதாக்கள் குறித்து விவாதிக்கவும், மாநிலங்கள் மீதான தங்கள் கவலையை வெளிப்படுத்தவும் எதிர்க்கட்சிகளுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நிகழ்வுகளை நாங்கள் பார்த்துள்ளோம்” என்று மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தபால்காரர் வேலையை ஆளுநர் சரியாக செய்ய வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

பல முக்கிய மசோதாக்கள் மற்றும் பிற பிரச்சினைகள் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலில் முன்பே விவாதிக்கப்படாததால், மாநிலங்களின் கருத்துக்கள், கவலைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் ஆகியவை முடிவெடுக்கும் போது ஒன்றியத்தால் முறையாக கேட்கப்படுவதில்லை அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

எனவே, கவுன்சில் தொடர்ந்து நடைபெற்றால், அது ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும். அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் என்றும் நான் நம்புகிறேன், “என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

ராணுவ ஆட்சிக்கான அடித்தளம் தான் Agnipath | Dr Kantharaj Interview

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை மீண்டும் தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்