தமிழகத்தில் பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர், ஒருவர் அண்ணாமலை; மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, இதில் ஆளுநர் ரவி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 7- ந்தேதி இந்திய நாட்டை ஒருங்கிணைக்கும் நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாஜகவை பொறுத்தவரை இரண்டு தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் தமிழக ஆளுநர் ரவி.
இவர்களில் ரவி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அண்ணாமலையை பொருத்தவரை விளம்பரத்திற்காகவும் தினமும் தன்னை பற்றி செய்திகள் வர வேண்டும் என்பதற்காகவும் முரண்பாடாக பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருக்குறளில் உள்ள ‘ஆதிபகவன்’ என்கிற சொல் ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தமிழக ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையாகியுள்ளது.
kallakurichi Sakthi School Ravi and Shanthi released | 2nd post mortem raise doubt | Dr Pugazhendhi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.