Aran Sei

செம்மரக் கடத்தலில் தொடர்புடையவரை ஓபிசி அணி மாநில செயலாளராக நியமித்த தமிழக பாஜக – எதிர்ப்பு வலுத்ததால் 2 மணிநேரத்தில் பதவி பறிப்பு

மிழ்நாடு பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் சமூக பிரிவு (OBC Morcha)  மாநிலச் செயலாளராக செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புள்ள கே.வெங்கடேசன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததால் அவருக்கு வழங்கப்பட்ட பதவியை இரண்டு மணி நேரத்தில் தமிழக பாஜக தலைமையகம் திரும்பப் பெற்றுள்ளது.

ரெட் ஹில்ஸ் காவல் நிலையத்தில் வெங்கடேசன் மீது ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை முயற்சியும் அடங்கும். கடந்த 2011ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவரை, 2015ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு செம்மரம் கடத்தியதாக ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகா: அரசு வழங்கிய நிலத்தைக் கேட்டு மிரட்டிய பாஜக எம்எல்ஏ – 4 பேர் தற்கொலை முயற்சி

முன்னதாக, அதிமுக இளைஞரணியில் இவர் இருந்தார். அதோடு இளைஞரணி துணை செயலாளர் பொறுப்புவரை வகித்தார். பின்னர் செம்மரக்கடத்தல் புகார் காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சில காலமாக ரியல் எஸ்டேட் பணிகளை செய்து வந்தவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அப்போதே பாஜகவினர் உட்பட பலர் இதை விமர்சனம் செய்தனர்.

ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது; உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கருத்து

தற்போது, ​ தமிழக பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் சமூக பிரிவு மாநிலச் செயலாளராக கே.வெங்கடேசன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இரண்டு மணி நேரத்தில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

source: indiatoday

புல்டோசர் பாபாவும், புல்டோசர் மாமாவும் | Aransei Explainer

செம்மரக் கடத்தலில் தொடர்புடையவரை ஓபிசி அணி மாநில செயலாளராக நியமித்த தமிழக பாஜக – எதிர்ப்பு வலுத்ததால் 2 மணிநேரத்தில் பதவி பறிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்