தமிழ்ப் படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும். மாற்று மொழி டப்பிங், ஆங்கிலப் படங்கள் தனியாக திரையிட கால அட்டவணை உருவாக்க வேண்டும் என இயக்குனர் சீணு ராமசாமி தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கேரளா, கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும்போது அவர்கள் முன்னுரிமை தருவது போல தமிழ்நாட்டு படங்கள் வெளியாகும்போது தமிழ் படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்துல மூனு
டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள்
அதிக விளம்பரத்தோட
வந்தா
இங்க இருக்கிற 'ரைட்டர்' எப்படி தன்னோட வீட்ல ஆனந்தமா விளையாட முடியும்?
சிலந்தி கூடு கட்டிராதா?எல்லாத்தையும்
ஒரே நேரத்துல விடாம
ஒவ்வொன்னா கூட விடுங்க
இது பத்தி யோசிக்கலமா?அவ்வளவுதான் ஏ கேள்வி..!! https://t.co/pSrJWdn97J
— R.Seenu Ramasamy (@seenuramasamy) December 27, 2021
மேலும், ஒரே நேரத்துல மூனு டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் அதிக விளம்பரத்தோட வந்தா இங்க இருக்கிற ‘ரைட்டர்’ எப்படி தன்னோட வீட்ல ஆனந்தமா விளையாட முடியும்? சிலந்தி கூடு கட்டிராதா?
எல்லாத்தையும் ஒரே நேரத்துல விடாம ஒவ்வொன்னா கூட விடுங்க இது பத்தி யோசிக்கலமா? அவ்வளவுதான் ஏ கேள்வி..என்று இயக்குனர் சீணு ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தி இயக்குநர் சீணு ராமசாமியின் பதிவை பகிர்ந்து இயக்குநர் சேரனும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ”பதில் யார் சொல்லுவா. நாம தான் பொலம்பனும்… ஆனால் இது ஜனநாயக நாடு… எல்லாரும் வாழத்தான் எல்லாரும் குரல் கொடுக்குறாங்க.. நம்புவோம்” என்று தெரிவித்துள்ளார்
பதில் யார் சொல்லுவா … நாம தான் பொலம்பனும்… ஆனால் இது ஜனநாயக நாடு… எல்லாரும் வாழத்தான் எல்லாரும் குரல் கொடுக்குறாங்க.. நம்புவோம். https://t.co/doevt6TYM1
— Cheran (@directorcheran) December 27, 2021
நேரடி தமிழ்ப்படங்களை தனியாகவும் மொழிமாற்றுப்படங்களை தனியாகவும் வெளியிடுமாறு தயாரிப்பு சங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.