ஆப்கானிஸ்தான் உள்ள அனைத்து பெண் செய்தி வாசிப்பாளர்களும் செய்தி ஒளிபரப்பின் போது, அவர்களின் முகத்தை மறைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை தாலிபன் ஆட்சியாளர்கள் பிறப்பித்துள்ளனர்.
வியாழனன்று (மே 19) இந்த உத்தரவு அறிவிக்கப்பட்ட போது, சில செய்தி நிறுவனங்கள் மட்டுமே இந்த பின்பற்றின. ஆனால், ஞாயிற்றுக்கிழமை (மே 22) இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அமைச்சகம் தெரிவித்த பிறகு பெரும்பாலான செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியபடி செய்தி வாசித்தனர்.
இந்த கொள்கை ”இறுதியானது மற்றும் பேச்சுவார்த்தைக்கு உகந்தது அல்ல” என்று ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது.
ஆப்கானிஸ்தானில் 6ஆம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை – தாலிபன் அரசு உத்தரவு
”இது எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வெளிப்புறக் கலாச்சாரம். நாங்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. மேலும், இது நான் நிகழ்ச்சிகளை வழங்கும்போது எங்களுக்கு சிக்கலை உருவாக்கக் கூடும்” என்று ஆப்கானிஸ்தானின் டோலோனெவ்ஸின் தொலைக்காட்சி தொகுப்பாளரான சோனியா நியாஸி தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக செய்தி வாசிக்கும் போது, உடல்நிலை சரியில்லாமல் போனதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஆணை அனைத்து பெண் செய்தி வாசிப்பாளர்களையும் கட்டாயப்படுத்த முடியாது. ஏனென்றால், இஸ்லாத்தில் முகத்தை மறைக்க வேண்டும் கட்டாயப்படுத்தவில்லை” என்று நியாசி கூறியுள்ளார்.
ஒவ்வொரு இஸ்லாமிய அறிஞர்களும் அரசியல் பிரமுகர்களும் இந்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“இதுபோன்ற ஆணைகள் வெளியிடப்பட்டு பெண்கள் மீது திணிக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் பொதுத்தளத்தில் இருத்ந்து பெண்கள் முழுவதுமாக அகற்றப்படுவார்கள், இப்போது பெண்கள் படிப்படியாக அகற்றப்படுவதைப் பார்க்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் மீது பெரும் கட்டுப்பாடுகளை விதித்தனர், அவர்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பர்தா அணிய வேண்டும் மற்றும் பொது வாழ்க்கை மற்றும் கல்வியில் இருந்து அவர்களைத் தடை செய்தனர்.
ஆப்கானிஸ்தானின் மாவட்டங்களை கைப்பற்றிய தாலிபன்கள் – சூழ்கிறதா போர் மேகம்
கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் ஆரம்பத்தில் தங்கள் கட்டுப்பாடுகளை ஓரளவு நிதானப்படுத்தியதாகத் தோன்றியது, பெண்களுக்கு எந்த ஆடைக் கட்டுப்பாடும் இல்லை என்று அறிவித்தது.
ஆனால், சமீபத்திய வாரங்களில், தாலிபன்கள் ஒரு கூர்மையான, கடுமையான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இது உரிமை ஆர்வலர்களுக்கு அச்சத்தை உறுதிப்படுத்தியது மற்றும் ஏற்கனவே அவநம்பிக்கை கொண்ட சர்வதேச சமூகத்திற்கு தலிபான்களை கையாள்வதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
Source: Aljazeera
Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview | G Square | Savukku Shankar DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.