Aran Sei

மக்களை பொய் வழக்கில் சிக்க வைக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல்

க்களை பொய் வழக்கில் சிக்கவைக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய வழக்கில் இருந்து பாலிவுட் திரைக் கலைஞர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளது நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி: போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. இந்த வழக்கைக் கையாண்ட விதத்திற்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார்.

”நிரபராதி மீது பொய்யாகக் குற்றம் சாட்டினால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிமீதான நடவடிக்கை தொடர்பாக தகவல் அளித்துள்ளது.

ஆர்யன் கான் வழக்கு: போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை – சிறப்பு நீதிமன்றம் கருத்து

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, கோவாவிற்கு சென்று கொண்டிருந்த கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட 20 பேரை அவர்கள் கைது செய்திருந்தனர். இதில், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கு அக்டோபர் 28, 2021 தேதி மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

Source: NDTV

Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan | BJP Annamalai Vs Reporters

மக்களை பொய் வழக்கில் சிக்க வைக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்