Aran Sei

தேவேந்திர குல வேளாளர் மசோதா : ‘ தமிழகத்தில் காலூன்ற முடியாத பாஜக சாதியை கருவியாக எடுக்கிறது’ – டி.ராஜா

மிழகத்தில் பாஜகவினால் காலூன்ற முடியாததால், பழைய சாதி கட்டமைப்பை மீண்டும் திணித்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 16) சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

எஸ்.சி பட்டியலிலிருந்து நீக்குக: தேவேந்திர குல வேளாளர்கள் போராட்டம்

அப்போது, “தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து தான் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜகவின் தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இத்தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும். தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பாஜக வீழ்ச்சி அடையும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குள வேளாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “பாஜக சாதிக் கட்டமைப்பை காப்பாற்றி. அந்த சாதி கட்டமைப்பின் மீது நின்று தன்னுடைய அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்கிறது. தமிழகத்தில் பாஜகவினால் காலூன்ற முடியவில்லை. பழைய சாதி கட்டமைப்பை மீண்டும் திணித்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கிறது.” என்று டி.ராஜா சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளார்.

10 ஆண்டுகளில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் 6% அதிகரிப்பு

மேலும், “ஆனால், இதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பலியாகிவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். ஏனென்றால் தமிழகம் பெரியார், அயோத்திதாசர் உள்ளிட்டோர் பிறந்த மண். எனவே, பாஜக சாதியை தனது அரசியல் கருவியாக எடுப்பது தமிழகத்தில் எடுபடாது.” என்று கூறியுள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் மசோதா : ‘ தமிழகத்தில் காலூன்ற முடியாத பாஜக சாதியை கருவியாக எடுக்கிறது’ – டி.ராஜா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்