குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
குஜராத் தொங்கு பாலம் விபத்து குறித்துப் பேசிய ஒவைஸி, “மோர்பியில் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. இது குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம். குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சியால், கொரோனா காலத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அங்கு பணவீக்கம் உள்ளது, வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு குரல் கொடுக்கவும் தலைமையை உருவாக்கவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். குஜராத் தேர்தலில் இந்த பிரச்சினைகளை நாங்கள் எழுப்புவோம்’ என்று அவர் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் மோர்பி என்ற பகுதியில் 1879ஆம் ஆண்டு தொங்கு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குவியும் ஒரு இடமாகவே இருந்து உள்ளது. இத்தனை ஆண்டுகள் இந்த தொங்கு பாலத்தைப் பயன்படுத்தி, நதி கடந்து வந்தனர். இதனிடையே பராமரிப்பு பணிகளுக்காக இந்த பாலம் இந்தாண்டு தொடக்கத்தில் மூடப்பட்டன.
சுமார் 7 மாதங்களாகப் பராமரிப்பு பணிகளுக்குப் பின் இந்த பாலம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பாலத்தில் அதிகப்படியான மக்கள் இருந்தனர். அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 130 பேர் இந்த விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.