Aran Sei

பாஜகவினர் கட்சி மாறுவதற்கு அவர்களின் சர்வதிகார ஆட்சியே காரணம் – சுஷில் குமார் ஷிண்டே

த்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே, சர்வாதிகார ஆட்சியால் சலிப்படைந்து பல தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி மற்ற கட்சிகளில் இணைகிறார்கள் என்று கூறியுள்ளார்.

நேற்று(ஜனவரி 15), மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள சுஷில் குமார் ஷிண்டே, உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் தலைவர்கள் காங்கிரஸை விட சமாஜ்வாதி கட்சியில் இணைய ஏன் விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, “என்ன நடந்த்காலும், நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, மாநிலத்தில் உள்ள சில பிரிவினரின் வாக்குகளைக் கண்டிப்பாக பெறும்” என்று கூறியுள்ளார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அடுத்து கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் விலகல்: வலுவிழக்கிறதா உ.பி., பாஜக கூட்டணி?

பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு மீறல்கள் இருந்ததாக கூறும் பிரதமர் அலுவலக அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, “பிரதமரின் பாதுகாப்பில் எந்த மீறலும் இருந்ததாக நான் நினைக்கவில்லை. அவர்கள் (பிரதமரும் அவரது பாதுகாப்புப் பணியாளர்களும்) விழாவிற்குச் செல்வதற்கு முன் பல்வேறு ஒன்றிய நிறுவனங்களிடம் பயணம் குறித்து கேட்டிருக்க வேண்டும். விழா தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னேயே உளவுத்துறை அங்கே சென்றுவிட்டது. அங்கே எப்படி அவர்கள் போனார்கள்? இப்போது இது காங்கிரஸின் அரசியல் என்று குற்றம் சாட்டுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“உத்தரபிரதேச பாஜகவில் இருந்து சில தலைவர்கள் காங்கிரஸில் இணையாமல், சமாஜ்வாதி கட்சியில் இணைந்தாலும் பரவாயில்லை. ஏன்.. எந்தக் கட்சியில் இணைந்தாலும் பரவாயில்லை. உத்தரப்பிரதேசத்தில் சில பிரிவினரின் வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைக்கும். பாஜகவின் சர்வாதிகாரத்தால் சலிப்படைந்தே அக்கட்சி தலைவர்கள் பிற கட்சிகளில் இணைகிறார்கள்” என்று சுஷில் குமார் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

‘உ.பி., தேர்தல் 80 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடையிலானது’- ஆதித்யநாத்தின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

“பாஜகவின் காலம் இப்போது முடிந்துவிட்டது. அவர்கள் பேச மட்டும்தான் செய்வார்கள், செயல்பட மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளனர். விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தானிகள் என்று கூறியது தவறானது. இந்த விவசாயிகள் அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்களின் பிரச்சினைகள் முன்பே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதற்கான மன உறுதி ஒன்றிய அரசிடம் இல்லை” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: PTI

பாஜகவினர் கட்சி மாறுவதற்கு அவர்களின் சர்வதிகார ஆட்சியே காரணம் – சுஷில் குமார் ஷிண்டே

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்