நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்துவிட்டு, மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (பிப்ரவரி 22) மகாராஷ்ட்ர மாநிலம், தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுப்ரியா சிலே பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் – திட்ட செலவு 13,450 கோடியாக உயர்வு
அப்போது, “மத்திய விஸ்டா திட்டத்துக்காக (புதிய நாடாளுமன்ற கட்டிட திட்டம்) மத்திய அரசு ரூ.800 முதல் ரூ.1000 கோடி செலவிடப்போகிறது. புதிய நாடாளுமன்றம் கட்டுங்கள் என்று உறுப்பினர்கள் யாரும் கேட்கவில்லை. அதிலும், நம் நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஒழிக்கப்படாத நேரத்தில், புதிய நாடாளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்து மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவமனை கட்டப்போகிறோம். அதனால் 5 ஆண்டுகளுக்கு நிதி ரத்து செய்கிறோம் என்று சொன்னால் நான் மகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பேன்.” என்று சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
நாடாளுமன்ற விஸ்டா கட்டிட முறைகேடு – குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாக எஸ்பி குழுமம் அறிவிப்பு
கடந்த ஆண்டு, 2020-21 மற்றும் 2021- 22 நிதி ஆண்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை, சுகாதார சேவைகளுக்கும், நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.