Aran Sei

ரிலையன்ஸ், ஃபியூச்சர் குழுமம் இடையிலான ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – அமேசான் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

credits : the hindu

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தனது வணிக நிறுவனங்களை விற்க, ஃபியூச்சர் குழுமம் ரூ.24,713 கோடிக்கு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒழுங்குமுறை ஒப்புதலை, உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் தொடர்ந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதித்ததோடு, நிறுவனங்களுக்கான தீர்ப்பாயம் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம், ஆனால் மறு உத்தரவு வரும்வரை இறுதி ஒப்புதல் வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபியூச்சர் ரிடேய்ல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கங்களைக் கோரியுள்ள நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஃபியூச்சர் ஒப்பந்தம் – அமேசானுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு

ஃபியூச்சர் குழுமம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம், தங்கள் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக, அமேசான் நிறுவனம், சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஃபியூச்சர் நிறுவனத்தின் ஒப்பந்ததிற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை இந்தியாவில் இருக்கு ஒரு நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டியிருந்ததால், அமேசான் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிப்ரவரி 2 ஆம் தேதி, வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.ஆர்.மிர்தா, சிங்கப்பூர் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

அமேசான், ரிலையன்ஸ் மோதல் – ஃபியூச்சர் ரிடெய்ல் பங்குகளை விற்க தடை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

இதை எதிர்த்து ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனம், அவசர மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.என்.பட்டேல், ஜ்யோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி மிர்தா வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஃபியூச்சர் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துத் உத்தரவிட்டனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அமேசான் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், அமேசானின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஒப்பந்தை மேற்கொள்ள வழங்கப்பட்டிருந்த ஒழுங்குமுறை ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஃபியூச்சர் குழுமத்தின் ஒப்பந்தம் தாமதமாகி வருவதால், ஃபியூச்சர் ரிடேய்லின் பங்குகள் 10 சதவீதமும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு 2.8 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ், ஃபியூச்சர் குழுமம் இடையிலான ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – அமேசான் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்