Aran Sei

போக்சோ சட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு – தடை செய்த உச்ச நீதிமன்றம்

credits : the hindu

போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் அடிப்படையில், ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை பாலியல் தாக்குதல் என்று கூறுமுடியாது என்றும், மாறாக, பாலியல் உள்நோக்கத்துடன், தோலோடு தோல் உரசினால் மட்டுமே அவ்வாறு கருத முடியும் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.

சமீபத்தில், போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கண்டேவாலா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே போதும் – உச்ச நீதிமன்றம்

கொய்யா பழம் தருவதாகக் கூறி, குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஒருவர், ஆடைகளைக் களைந்து மார்பகத்தை அழுத்தியதாக அந்தக் குழந்தை தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மேல் ஆடையைக் கழற்றாமல், குழந்தையின் மார்பகத்தைத் தொடுவது, போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் படி குற்றமா என்பது குறித்து ஆராய்ந்தது.

போக்சோ சட்டம் குறித்து மும்பை நீதிமன்றம் வினோத விளக்கம் – தண்டனை பெற்றவர் விடுதலை

போக்சோ சட்டத்தின் பிரிவு 7ல், குழந்தையின் அந்தரங்க பாகங்களைத் தொடுவது அல்லது, ஒருவர் குழந்தையைத் தன்னுடைய அந்தரங்க பாகங்களைத் தொடச் செய்வது அல்லது பாலியல் நோக்கத்துடன், உடல்ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது, பாலியல் தாக்குதல் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

இந்த வழக்கில், “அந்த நபர் மேலாடையை கழற்றி கையை வைத்தாரா, அல்லது கையை ஆடைக்குள் விட்டாரா என்பது தொடர்பாகக் குறிப்பான தகவல் இல்லாமல், இதைப் பாலியல் தாக்குதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது” என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகவே, போக்சோ சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த நீதிபதி புஷ்பா கண்டேவாலா, பலவந்தமாக, பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டதாக, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354ன் படி அவருக்குத் தண்டனையை உறுதி செய்தார்.

மாந்திரீக மூடநம்பிக்கையால் தொடரும் துயரம்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமி கொலை

மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேசிய மகளிர் ஆணையம் “இந்தத் தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு விதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அனைத்து பெண்களையும் கேலிக்குள்ளாக்குகிறது. பெண்களின் பாதுகாப்புக்காகச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள விதிகளையும் அர்த்தமற்றதாக்கியுள்ளது” என்று விமர்சித்தது. இதற்கு எதிராக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் கூறியிருந்தது.

இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு தவறான முன்னுதாரணத்தை சமூகத்தில் ஏற்படுத்திவிடும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதாக லைவ் லா  செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, உ ச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடை செய்வதாகக் கூறி உத்தரவிட்டுள்ளாரென லைவ் லா தெரிவித்துள்ளது. இதனல் இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டதும் தடை செய்யப்பட்டுள்ளது, அவருக்கு உச்ச நீதிமன்றத்திலிருந்து நோட்டீசும் அனுப்பபட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

போக்சோ சட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு – தடை செய்த உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்