Aran Sei

ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

த்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பிப்பிய விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்ற தர்ம நாடாளுமன்றம்(தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பல இந்து மத சாமியார்கள் கண்டனத்திற்குரிய வகையில் பேசியுள்ளதோடு, சிறுபான்மை சமூகத்தினரை கொலை செய்யவும் அழைப்பு விடுத்தனர். இவ்விவகாரம் நாடு முழுதும் பெரும் கண்டனத்தை கிளப்பியது.

இவ்விவகாரத்தை விசாரிக்கக் கோரி, மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவுக்குப் பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கு – விசாரணையில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படுமென காவல்துறை அறிவிப்பு

அம்மனுவில், “ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் நிகழ்ச்சிமீது நாங்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளோம். நாட்டின் முழங்கப்படும் முழக்கங்கள் சத்யமேவ ஜெயதே என்பதில் இருந்து சசாஸ்த்ரமேவ ஜெயதே என மாறிவிட்டன” என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, “இம்மனுவை நாங்கள் பரிசீலிப்போம். இது குறித்து, ஏற்கனவே விசாரணை நடக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதற்கு, வழக்கு  மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்