குடியுரிமை` திருத்த சட்டத்தை நீக்கக் கோரி போராடியவர்களிடம் இருந்து, பொதுச் சொத்துக்களை அழித்ததாகக் குற்றஞ்சாட்டி, பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகைகளை திருப்பி அளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு தருமாறு, போராட்டக்காரர்களுக்கு பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த வாரம், அந்நோட்டீஸ்களை திரும்பப் பெறுமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சிஏஏ போராட்டம்: வன்முறையால் ஏற்பட்ட சேதம் தொடர்பான வழக்கு – உ.பி., அரசை எச்சரித்த உச்ச நீதிமன்றம்
இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 18), அவ்வுத்தரவின் பேரில் 274 நோட்டீஸ்களை திரும்பப் பெற்றுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அப்போது, இழப்பீடுகள் என கூறி, இதுவரை வசூலிக்கப்பட்ட பணத்தைத் திருப்பி அளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், ‘பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கான உத்தரப் பிரதேசம் மீட்புச் சட்டம், 2020’ என்ற புதிய சட்டத்தின் கீழ் சேதங்களுக்கு இழப்பீடு வசூலிக்க மாநில அரசிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பொதுச் சொத்துக்கள் உண்மையில் சேதமடைந்துள்ளனவா என தீர்ப்பாயத்தின் முன் நிறுவிய பின்னர் இழப்பீடுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கலாம்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு, பொதுச் சொத்துகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.