பாலியல் தொழிலாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரானா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த நாட்டில் அனைத்து தனிநபர்களுக்கும் வழங்கப்படும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பை செயல்படுத்த வேண்டும் என்று கடமையாற்றும் காவல்துறை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்தவொரு பாலியல் தொழிலாளிக்கும் சட்டத்தின்படி உடனடியாக மருத்துவ உதவி உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு வலியுறுத்தியுள்ளது.
‘பாஜகவால் வஞ்சிக்கப்படும் ஓபிசி மக்கள்’ – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சரத் பவார் வலியுறுத்தல்
பாலியல் தொழிலாளர்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை பெரும்பாலும் மிருகத்தனமாகவும் வன்முறையாகவும் இருப்பது கவனிக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்கள் உணர வேண்டும். அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை மனித உரிமைகள் மற்றும் பிற உரிமைகளும் பாலியல் தொழிலாளர்களுக்கு உண்டு. காவல் துறையினர் அனைத்து பாலியல் தொழிலாளர்களையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மேலும் அவர்களை வாய்மொழியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது. வன்முறைக்கு உட்படுத்தவோ அல்லது எந்தவொரு பாலியல் செயலிலும் அவர்களை கட்டாயப்படுத்தவோ கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
பாலியல் தொழிலாளிகள் கைது, ரெய்டு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின்போது, பாதிக்கப்பட்டவர்களா அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களா என்ற விவரத்தை வெளியிடாமல் இருக்க, ஊடகங்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு இந்தியன் பிரஸ் கவுன்சிலை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் நடவடிக்கைகள் (எ.கா., ஆணுறைகளைப் பயன்படுத்துதல், முதலியன) குற்றங்களாகக் கருதப்படவோ அல்லது குற்றச் செயலுக்கான ஆதாரமாகவோ கருதப்படக் கூடாது.
ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம், மாநில சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலம் பாலியல் தொழிலாளிகளின் உரிமைகள், பாலியல் வேலை, உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வ தன்மை குறித்து கற்பிப்பதற்கான பயிலரங்குகளை நடத்த வேண்டும்.
பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நடைமுறைப்படுத்தவும், கடத்தல்காரர்கள் அல்லது காவல்துறையினரால் தேவையற்ற துன்புறுத்தலைத் தடுக்கவும் நீதித்துறை அமைப்பை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 யின் கீழ் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
Source: ndtv
Nenjukku Needhi I கை கொடுத்தா தீட்டு, கை கொடுக்க கூடாது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.