பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 27), உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, “பேரறிவாளன் விவகாரத்தில் இன்னும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார். உச்ச நீதிமன்றம் வழங்கிய பிணை காரணமாக பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் இருக்கிறார். பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் கூட்டாட்சி கட்டமைப்புக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும். சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
“மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளை, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஆகவே, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும். அத்துடன் பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஒருவாரத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
“பேரறிவாளனை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில், ஏன் அவரேவும் சிக்க வேண்டும்? இதையெல்லாம் தவிர்க்க, ஆளுநர், குடியரசுத் தலைவர், அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை நாங்களே விடுவித்து இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம்” என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
“பந்து பொறுக்கி போடாதீங்க தமிழிசை”
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.