Aran Sei

ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு மாநில அரசுகளின் உரிமைகளை தெளிவாக நிறுவுகிறது: தமிழக நிதியமைச்சர் கருத்து

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு, மாநில அரசுகளை கட்டுப்படாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகுறித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசு, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை என்றாலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் அரசியலமைப்பின் அடிப்படையில் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களை தெளிவாக நிறுவுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் அதன் பரிந்துரைகளை பின்பற்றுமாறு அரசாங்கங்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநரின் சம்பிரதாய ஒப்புதலுக்காக தமிழ்நாடு அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட 20 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆளுநர்தான் இதை முடிவு செய்வார் எனில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவையின் தேவை தேவை என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்துவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது: உச்சநீதிமன்றம் கருத்து

முறையற்ற திட்டமிடல் மற்றும் தவறான கொள்கைகள் காரணமாக, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை பல ஆண்டுகளாக எதிர்பார்த்த பலன்களை தரவில்லை. ஜிஎஸ்டியால் மாநிலங்கள் அதிகாரத்தை இழக்கும் என்பதை நாங்கள் முன்னரே வலியுறுத்தி வந்திருக்கிறோம். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Source : The New Indian Express

கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar

ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு மாநில அரசுகளின் உரிமைகளை தெளிவாக நிறுவுகிறது: தமிழக நிதியமைச்சர் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்