சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2002 குஜராத் படுகொலைகளின்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற இந்துத்துவ மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்தியவர் டீஸ்டா செடல்வாட்..
இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாத வெறியாட்டத்தை நடத்திய இந்துத்துவ வெறியர்கள் 117 பேர் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா எனுமிடத்தில் நடந்த இஸ்லாமிய படுகொலை வழக்கில் குஜராத்தின் அன்றைய நரேந்திர மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 26 ஆண்டுக்கால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதிலும் டீஸ்டா செடல்வாட்டின் பங்கும் அவரது கடும் உழைப்பும் முக்கியமானவை.
குஜராத் படுகொலைகள் குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வர் மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் இருவரும் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேரை சிறப்பு விசாரணைக் குழு விடுவித்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஞ்சீவ் பட், ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது, டீஸ்டா செடல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியத் தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை
இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
Source: ndtv
Annamalai & H Raja are curse to tamil society says PTR Palanivel Thiagarajan | Deva’s Update 18
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.