Aran Sei

இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை 2021யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின்  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் நாட்டில் உள்ள குற்ற புள்ளிவிவரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்து வருகிறது. ஆண்டு தோறும் இந்தியாவில் நிகழும் குற்றங்கள்’, ‘விபத்து உயிரிழப்புகள் மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள்’,  ‘இந்திய சிறைச்சாலைகள் பற்றிய புள்ளி விவரங்கள்’, காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பிரிவுகளில் புள்ளி விவரங்களை வெளியிடுகிகிறது.

கள்ளக்குறிச்சி வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது – உத்தரவை திரும்பப் பெற ரெட் பிக்ஸ், அரண்செய் உள்ளிட்ட சேனல்கள் வேண்டுகோள்

அந்த வகையில், 2021 வருட ‘விபத்து உயிரிழப்புகள் மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள்’ தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தற்கொலைகள் எண்ணிக்கை, தற்கொலை விகிதம், தற்கொலைக்கான காரணங்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின் சமூக பொருளாதார பின்னணி, பாலின அடிப்படையிலான தற்கொலைகல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன

2021ல் மட்டும் நாட்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிக எண்ணிக்கையாகும். இதில், பெரும்பாலானோர் மகாராஷ்டிரா (22,207), தமிழ்நாடு (14,965), மத்திய பிரதேசம் (14965) ஆகிய மாநிலங்களைச் சேர்நதவர்கள்.

கர்நாடகா; மடாதிபதி மீது பாலியல் புகார்: 7 நாட்களில் அறிக்கை வேண்டும் – காவல் துறைக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டின் தற்கொலை விகிதம் (ஒரு லட்சம் மக்கள் தொகையில் தற்கொலை எண்ணிக்கை) 26.4 ஆக உள்ளது. அதாவது, 2021ல் ஒரு லட்சம் பேரில் சராசரி 26 பேர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்துள்ளனர்.

தற்கொலைக்கு முக்கிய காரணம் குடும்ப பிரச்சனைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த எண்ணிக்கியில் கிட்டத்தட்ட  50,000 பேர் குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5386 பேர் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

18 முதல் 30 வயதினர் மற்றும் 30 முதல் 45  வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை முறையே 34.5%,  31.7% ஆக உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த தற்கொலை  எண்ணிக்கையில் 65% பேர் 18-45 வயதினராக உள்ளனர்.

பாலின அடிப்படையிலான தற்கொலை விகிதம்  72.5 (ஆண் ) : 27.4 (பெண்) ஆக உள்ளது. ஆண்களில், தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 37,751 ஆக உள்ளது. திருமணம் தொடர்பான பிரச்சனைகள் (வரதட்சணை கொடுமை) பெண்கள் தற்கொலையில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தற்கொலையில், இல்லத்தரசிகள் எண்ணிக்கை மட்டும்  23,179 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிகமாக 3,221 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவாசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 10,881 ஆக உள்ளது. இதில், 5,563  விவசாய தினக் கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

குடும்ப பிரச்சனைகள் காரணமாக நிகழும் ஒட்டுமொத்த தற்கொலைகள் எண்ணிக்கை, இல்லத்தரசிகள் எண்ணிக்கை, அரசு ஊழியர்களின் தற்கொலைகள் எண்ணிக்கை, குடும்ப பெருந்தற்கொலை (Family mass suicide) எண்ணிக்கையில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டுளளதாக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amit sha answerable for missing heroin | sathyam tv investigation revealed | Aravindakshan interview

 

இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்