பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான சுதா பரத்வாஜ் அவர்களுக்கு இந்த விசாரணை முடியும் வரை மும்பை நகரை விட்டு வெளியே செல்லக்கூடாது என நிபந்தனைகளுடன் கடந்த டிசம்பர் 10 அன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, பிணையில் வெளிவந்துள்ள இந்தியாவின் சிறந்த சமூக ஆர்வலரான சுதா பரத்வாஜ் மும்பையில் தங்கி வேலை தேடி வருகிறார்.
ஜூன் 2018 முதல், மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகான் கிராமத்தில் நடந்த வன்முறை தொடர்பாகச் சுதா பரத்வாஜ் உடன் 16 பேரை பாஜக அரசு சிறையில் அடைத்துள்ளது. அவர்களில் இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு – இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைது
இவர்களில் பழங்குடியினர்களின் உரிமைக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி 84 ஆவது வயதில் கடந்தாண்டு மரணமடைந்தார்.
டெல்லியில் உள்ள ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த சுதா பரத்வாஜால் இனி அங்கு வேலை செய்யமுடியாது. “சிறிய சிறையில் இருந்த நான் இப்போது ஒரு பெரிய சிறையில் வாழ்கிறேன்,” என்று இந்த புதிய வாழ்க்கையைப் பற்றி 60 வயதான சுதா பரத்வாஜ் நேற்று கூறியுள்ளார்.
சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுதா பரத்வாஜ் இந்தியா திரும்பிய பிறகு இங்கேயே தங்கிவிட்டார். கணிதவியலாளராக இருந்து பிறகு சட்டம் படித்து இறுதியில் உறுதியான செயல்பாட்டாளராகவும் தொழிற்சங்க வாதியாகவும் சுதா பரத்வாஜ் மாறினார்.
கனிம வளங்கள் நிறைந்த சத்தீஸ்கரில் இருந்து வெளியேற்றப் பட்டவர்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகள் உறுதியுடன் போராடினார். அவரது முயற்சி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சட்ட உதவிகளை வழங்கியது.
திருமதி பரத்வாஜ் 28 அக்டோபர் 2018 அன்று கைது செய்யப்பட்டார். அவரது தொலைப்பேசி, மடிக்கணினிகள் மற்றும் சில குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டன. இம்முறை பிணை கிடைப்பதற்கு முன்பு அவருக்கு 3 முறை அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
அவரது சிறைச்சாலையில் அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால், குளிப்பதற்கும் குடிப்பதற்கும் வாளிகளில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சில சமயங்களில், 35 பேர் தங்கக்கூடிய பெண்கள் சிறையில் 75 கைதிகள் வரை இருந்தனர். அப்போதெல்லாம் எங்கள் ஒவ்வொருவருக்கும் “ஒரு சவப்பெட்டியின் அளவு” இடம் மட்டுமே படுப்பதற்கு ஒதுக்கப்பட்டது என்று சுதா பரத்வாஜ் கூறியுள்ளார்.
இந்தியாவில் பரவிய மோசமான இரண்டாவது கொரோனா அலையினால் சுதா பரத்வாஜ் பிரிவில் உள்ள 55 பெண்களில் 13 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். “அப்போது எனக்கு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாகச் சிறை நிர்வாகம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு ஒரு நெருக்கமான “தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்ததாக” சுதா பரத்வாஜ் கூறியுள்ளார்.
ராணுவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நாகா மக்கள் – அறிக்கையை சமர்பித்த சிறப்பு விசாரணைக் குழு
சிறையில் தனது சக பெண் கைதிகளுக்குப் பிணை கோரி சட்ட விண்ணப்பங்களை எழுதுவதில் சுதா பரத்வாஜ் அதிக நேரத்தைச் செலவிட்டார். “நீதிமன்றங்களில் பிணை கோரி வாதிட அவர்களுக்கு வழக்கறிஞர் கிடைக்காததால் அவர்களில் யாருக்கும் பிணை கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் சுதா பரத்வாஜ் நினைவு கூர்ந்தார்.
சிறையில் என்னை விட மோசமாகப் பலர் இருந்ததைப் பார்த்த எனக்குப் பரிதாபமாக உணர நேரம் கிடைக்கவில்லை. என் மகளைப் பிரிந்திருந்தால் தான் நான் மிக மோசமாக உணர்ந்தேன் என்றார் சுதா பரத்வாஜ்
Source : BBC
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.