Aran Sei

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை – ஒரே மாதத்தில் 4 கொலை சம்பவம்

Credit: The Hindu

காஷ்மீர் மாநிலம் புல்மாமா மாவட்டத்தில் சம்பூர்வா கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காஷ்மீர் காவல்துறையினர், “தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வயல்வெளியில் பரூக் அஹ்மத் மிரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் துப்பாக்கி குண்டுகளின் காயம் இருந்துள்ளது. அவரது மரணம்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில், வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிய அவர் மாலை தனது வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, பரூக் அஹ்மத் மிர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்: தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது புலம்பெயர் தொழிலாளர் – அதிகரித்து வரும் திட்டமிடப்பட்ட தாக்குதல்

முன்னதாக, கடந்த 2 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர் விஜய்குமாரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு வங்கியின் கிளையில் பணிபுரிந்து வந்தார். அந்த சம்பவம் நடைபெற்ற அதே நாளில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளியையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீர்: துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மரணம்; ஒரே மாதத்தில் ஏழுபேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

இந்த சம்பவங்களுக்குப் பிறகு, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்கள் சாலைகளில் இறங்கிப் போராடினர். உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். தாங்கள் ஜம்முவுக்கு இடம்பெயர விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

Source: The Hindu

இந்திய இளைஞர்களை கூலிப்படையாக மாற்றும் Agnipath | Maruthaiyan Interview | Agnipath Indian Army | BJP

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை – ஒரே மாதத்தில் 4 கொலை சம்பவம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்